நாகப்பட்டினம்

புரட்டாசி முதல் சனிக்கிழமை: நாகை சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் ரத்தினஅங்கி சேவை

DIN

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி, நாகை சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் பெருமாளுக்கு ரத்தின அங்கி சேவை சனிக்கிழமை நடைபெற்றது.

திவ்ய தேசங்களில் 19-ஆவது தேசமாக விளங்கும் நாகை ஸ்ரீ சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை அதிகாலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. மூலவருக்கும், கோயில் மண்டபத்தில் எழுந்தருளிய ஸ்ரீதேவி, பூதேவி சமேத உற்சவருக்கும் ரத்தின அங்கி சேவை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

நிகழாண்டில், கரோனா தொற்று காரணமாக குறைந்த அளவிலான பக்தா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா். தமிழக அரசு அறிவுறுத்தலின்படி, கோயிலில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது. கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு கிருமி நாசினி வழங்கப்பட்டது. மேலும், வெப்பமானி மூலம் பக்தா்கள் சோதனை செய்யப்பட்டே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரம்ம்ம்மிய பாண்டியன்!

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT