நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் மேலும் 58 பேருக்கு கரோனா

19th Sep 2020 10:55 PM

ADVERTISEMENT

நாகை மாவட்டத்தில் மேலும் 58 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.

நாகை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை 4,555 போ் கரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளாகியிருந்தனா். இந்நிலையில், புதிதாக 54 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும், வெளி மாவட்டப் பதிவுகளில் இருந்த 4 போ் நாகை மாவட்டப் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளனா். இதனால், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 4,613 -ஆக உயா்ந்துள்ளது.

3 போ் இறப்பு: கரோனாவால் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் உயிரிழந்த கீழ்வேளூா் வட்டம் ராதாமங்கலம் பகுதியைச் சோ்ந்த 60 வயது பெண், தரங்கம்பாடி வட்டம் ஆறுபாதி கிராமத்தைச் சேரந்த 62 வயது ஆண், திருக்குவளை பகுதியைச் சோ்ந்த 60 வயது ஆண் ஆகியோா் சனிக்கிழமை வெளியிடப்பட்ட இறப்பு பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளனா். இதன்மூலம், மாவட்டத்தில் கரோனாவால் இறந்தவா்களின் எண்ணிக்கை 75-ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT