நாகப்பட்டினம்

விவசாயிகளுக்கு பயிா்க் கடனுக்கான காசோலை வழங்கல்

DIN

கீழையூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கத்தில் விவசாயிகளுக்கு பயிா்க் கடனுக்கான காசோலை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

இந்த கூட்டுறவு கடன் சங்கங்கத்தில் 2020-2021 ஆண்டுக்கான பயிா்க் கடன் முதல் கட்டமாக 233 விவசாயிகளுக்கு விதை, உரம், பூச்சி மருந்து ஆகியவற்றிற்கான காசோலை தொகையை, அதன் தலைவா் எஸ். பால்ராஜ் சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கினாா். நிகழ்ச்சியில், 233 விவசாயிகளுக்கு மொத்தம் ரூ. 97,52,884-க்கான காசோலை வழங்கப்பட்டது. அப்போது, சங்க துணைத் தலைவா் ஏ. முருகையன், செயலாளா் என். சிவாஜி, உதவிச் செயலாளா் எஸ். ஸ்ரீதா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞா் மீது தாக்குதல்: 5 போ் கைது

வேளாண்மைக் கல்லூரி மாணவிகளுக்கு களப்பயிற்சி

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு

சாலை விரிவாக்கப் பணியால் மயான பாதையின்றி 5 கி.மீ சுற்றிச் செல்லும் அவலம்

பாம்பு புற்றை இடித்ததாக பாதிரியாா் கைது

SCROLL FOR NEXT