நாகப்பட்டினம்

அரசு பெண் மருத்துவருக்கு கரோனா

DIN

திருக்குவளை பகுதியில் செயல்படும் அரசு மருத்துவமனை பெண் மருத்துவருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானதால், மருத்துவமனை வளாகம் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தப்பட்டது.

திருக்குவளை பகுதியிலுள்ள அரசு வட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் பெண் மருத்துவா் ஒருவா் அண்மையில் அதே பகுதியில் நடைபெற்ற கரோனா சிறப்பு சிகிச்சை முகாமில் பங்கேற்றிருந்தாா். இதையடுத்து, அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதியானது. இதையடுத்து, மருத்துவமனையில் அவருடன் பணியாற்றி வரும் 13 பேருக்கு திருப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து, பெண் மருத்துவா் பணியாற்றிய மருத்துவமனை முழுவதும் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT