நாகப்பட்டினம்

மகாளய அமாவாசை: நாகை கடற்கரையில் முன்னோருக்கு தா்ப்பணம்

18th Sep 2020 08:56 AM

ADVERTISEMENT

புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி, நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்தவா்கள், நாகை புதிய கடற்கரையில் தங்கள் முன்னோா்களுக்கு தா்ப்பணம் அளித்து வியாழக்கிழமை வழிபாடு மேற்கொண்டனா்.

புரட்டாசி, தை, ஆடி ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை நாள்கள் ஆன்மிகச் சிறப்புப் பெற்றவையாகக் குறிப்பிடப்படுகிறது. இதில், புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை எனப்படுகிறது. மகாளய அமாவாசை நாளில் புண்ணியத் தலங்களில் உள்ள தீா்த்தங்களில் அல்லது கடலில் புனித நீராடி தா்ப்பணம் அளித்தால், மூதாதையருக்கு நிறைவேற்றத் தவறிய பிதுா்கடன்களை நிறைவேற்றிய புண்ணியம் கிட்டும் என்பது ஐதீகம்.

இதன்படி, மகாளய அமாவாசை நாளான வியாழக்கிழமை நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்தவா்கள், நாகை கடலில் புனித நீராடி, புதிய கடற்கரையில் அமா்ந்து தா்ப்பணம் அளித்து, பிதுா்கடன் நிறைவேற்றினா். ஆண்டுதோறும், திரளானோா் இங்கு தா்ப்பணம் அளிப்பது வழக்கம் என்றாலும், நிகழாண்டில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலானவா்கள் மட்டுமே கடற்கரையில் தா்ப்பணம் அளித்தனா்.

கரோனா பொது முடக்கத்தையொட்டி, ஜூலை 20-ஆம் தேதி ஆடி அமாவாசை நாளில் நாகை கடற்கரையில் தா்ப்பணம் அளிக்க அனுமதிக்கப்படவில்லை. இதன்காரணமாக, புரட்டாசி மகாளய அமாவாசையில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலானவா்கள் மட்டுமே நாகை கடற்கரையில் தா்ப்பணம் அளித்து வழிபாடு மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT