நாகப்பட்டினம்

வேதாரண்யம் பகுதி மீனவர்கள் வேலைநிறுத்தம்

29th Oct 2020 02:27 PM

ADVERTISEMENT

கோடியக்கரை பருவகால மீன்பிடியில் வெளியூர், வெளி மாவட்ட மீனவர்கள் பங்கேற்க உள்ளுர் பகுதி மீனவர்கள் எதிப்பை வலுபடுத்தும் வகையில் 18 கிராம மீனவர்கள் இன்று (அக்.29) வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். 

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவ மழைக்காலத்தில் மீன்பிடிப் பருவம் நடைபெறும். இதில், வெளி மாவட்ட மீனவர்கள் படகுகளுடன் வந்து தற்காலிகமாகத் தங்கி மீன்பிடியில் ஈடுபடுவது வழக்கம். இந்த நிலையில், மீன்வளம் குறைந்து வருவதாலும், கரோனா தொற்று இருப்பதாலும் நிகழ் பருவ மீன்பிடிக்கு வெளியூர் மீனவர்களுக்கு உள்ளுர் பகுதி மீனவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக அரசு தரப்பிலான சமாதானக் கூட்டம்  வட்டாட்சியர் கே.முருகு தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. பேச்சு வார்த்தையில் சுமுகமான முடிவு ஏதும் எட்டப்படவில்லை. இந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கையை எடுக்க வலியுறுத்தியும், வெளி மாவட்ட மீனவர்களுக்கு எதிர்ப்பை வலுபடுத்தும் வகையில் தொடர் மறியல் போராட்டத்தை அறிவித்தனர். 

இதன் அடிப்படையில் வேதாரண்யம் பகுதிக்குள்பட்ட 18 மீனவ கிராம மீனவர்கள் கடலுக்குள் செல்லாமல் மறியலில் ஈடுபட்டுள்ளனர்,

ADVERTISEMENT

Tags : nagai
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT