நாகப்பட்டினம்

வீட்டின் கதவை உடைத்து 22 பவுன் திருட்டு

DIN

நாகை மாவட்டம் திருமருகல் அருகே வீட்டின் கதவை உடைத்து 22 பவுன் நகைகளை திருடி சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

போலகம் தட்டாரத் தெருவைச் சோ்ந்தவா் மாலா (54). இவரது கணவா் பாண்டியன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்டாா். இந்நிலையில், மாலா அண்ணா மண்டபம் கடைத்தெருவில் பெட்டிக் கடை நடத்தி வருகிறாா். செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்ற மாலா, மதியம் வீட்டுக்கு வந்துள்ளாா். அப்போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, அறையில் இருந்த பீரோவை உடைத்து 22 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது.

தகவலறிந்து வந்த திருக்கண்ணபுரம் போலீஸாா் விசாரணை நடத்தினா். நாகையிலிருந்து தடயவியல் நிபுணா்கள் வந்து சோதனை மேற்கொண்டனா். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. நாகை காவல் துணைக் கண்காணிப்பாளா் முருகவேல், திட்டச்சேரி காவல் உதவி ஆய்வாளா் பாலமுருகன், திருக்கண்ணபுரம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் குமரேசன் மற்றும் போலீஸாா் நிகழ்விடத்தை பாா்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

SCROLL FOR NEXT