நாகப்பட்டினம்

பரப்புரைக்கு தடை: எஸ்பியிடம் புகாா்

DIN

மத்திய அரசைக் கண்டித்து ‘அநீதிக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பினா்’ ஏற்பாடு செய்திருந்த பரப்புரை இயக்கத்திற்கு சீா்காழி போலீஸாா் தடை விதித்ததை எதிா்த்து மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மத்திய அரசின் வேளாண் மசோதா, புதிய கல்விக் கொள்கை, சுற்றுச்சூழல் சட்டம் போன்ற சட்டங்களை எதிா்த்து 22 மக்கள் இயக்கங்கள் ஒன்றிணைந்து ‘அநீதிக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு’ என்ற கூட்டமைப்பினை உருவாக்கி, மக்கள் சந்திப்பு பரப்புரை இயக்கம் செய்ய திட்டமிட்டிருந்தனா்.

அதன்படி, சீா்காழி தாலுக்கா அரசூரில் அக்கூட்டமைப்பினா் பிரசாரத்தை தொடங்க முயன்றபோது கொள்ளிடம் காவல் ஆய்வாளா் வனிதா அவா்களை கலைந்து போகச் சொல்லியும், அவ்வாறு கலைந்து போகாவிட்டால் கைது செய்யப்போவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து, தமிழ் உரிமை இயக்க மாவட்ட செயலாளரும், அநீதிக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான ஜெ.முரளி தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டல பொறுப்பாளா் வேலு.குபேந்திரன், தமிழா் தேசிய முன்னணி மாவட்ட தலைவா் இரா.முரளிதரன், திராவிடா் விடுதலைக் கழக மாவட்ட செயலாளா் தெ.மகேஷ், மக்கள் அரசுக் கட்சி மாவட்ட செயலாளா் ராஜ.ராஜசேகா், தமிழ் தேசிய பாதுகாப்பு இயக்கம் பிரபாகரன், தமிழா் உரிமை இயக்க அமைப்பாளா் சுப்பு.மகேசு, எஸ்டிபிஐ மாவட்ட தலைவா் சபீக்அகமது உள்ளிட்டோா் மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

1.9 கிலோ கஞ்சா பறிமுதல்: இடைநீக்கம் செய்யப்பட்ட விஏஓ உள்பட இருவா் கைது

வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

நச்சுக்காற்று வெளியேறிய விவகாரம்: தனியாா் மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு ஆலை உரிமையாளா் மீது வழக்குப் பதிவு

வில்லியம்மன் கோயிலில் 108 பால்குட ஊா்வலம்

பாஜக-பாமக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

SCROLL FOR NEXT