நாகப்பட்டினம்

குயில் வேட்டை: சீர்காழியில் 3 பேர் கைது, 14 குயில்கள் மீட்பு

26th Oct 2020 02:02 PM

ADVERTISEMENT

குயில் வேட்டையில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 14 குயில்களை வனத்துறையினர் மீட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் குயில் வேட்டையாடப்படுவதாக ஆக வனச்சரக அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்தது. இதனை அடுத்து வனச்சரக அதிகாரி குமரேசன் தலைமையில் வனசரக அதிகாரிகள் மற்றும் வனவர்கள் தரங்கம்பாடி அருகே திருக்களாச்சேரியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது 14 குயில்களை பிடித்து வைத்திருந்தது தெரியவந்தது. 

அவரிடம் விசாரணை செய்ததில் திருக்களாச்சேரி பகுதியைச் சேர்ந்த ரகு, காரைக்கால் பகுதியைச் சேர்ந்த தங்கைன், நெடுங்காடு பகுதியைச் சேர்ந்த அன்பரசன் என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்த 14 குயில்களையும் மீட்ட அதிகாரிகள் பின்னர் அவற்றை பறக்கவிட்டனர். இதையடுத்து அவர்களுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 

பின்னர் வனசரக அதிகாரி பறவைகளை தனிநபர்கள் பிடித்து செல்வது சட்டப்படி குற்றமாகும். இதை யாரும் செய்யக்கூடாது என அறிவுறுத்தினார்.

ADVERTISEMENT

Tags : mayiladuthurai
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT