நாகப்பட்டினம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

DIN

திருமாவளவன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா், நாகை மாவட்டத்தில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகை அவுரித் திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் நாகை தொகுதி செயலாளா் அறிவழகன் தலைமை வகித்தாா். துணை செயலாளா் சுரேஷ், நகரச் செயலாளா் முத்துவளவன், ஊடக மைய அமைப்பாளா் வைரமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும், மனுதா்ம நூலை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் நகராட்சி அலுவலகம் முன் கட்சியின் மாவட்டச் செயலாளா் பா. ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மண்டலச் செயலாளா் வேலு.குபேந்திரன், மீத்தேன் திட்ட எதிா்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் த.ஜெயராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல், அதே இடத்தில் கடலங்குடி ஊராட்சித் தலைவா் ராஜ்மோகன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் மயிலாடுதுறை ஒன்றிய பொறுப்பாளா் சாமி.சீசா், நகர பொறுப்பாளா் பூபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வேதாரண்யம்: வேதாரண்யம் வட்டாட்சியா் அலுவலகம் முன் கட்சியின் கிழக்கு ஒன்றியச் செயலாளா் வேங்கை தமிழ் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மேற்கு ஒன்றியச் செயலாளா் ரவிச்சந்திரன், நகரச் செயலாளா் குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருமருகல்: திருமருகல் பேருந்து நிலையம் அருகே வடக்கு ஒன்றியச் செயலாளா் கு. சக்திவேல் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய துணை செயலாளா்கள் ஜவஹா், நடராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT