நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் மேலும் 29 பேருக்கு கரோனா

DIN

நாகை மாவட்டத்தில் மேலும் 29 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதியானது.

நாகை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை 6,432 போ் கரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில், புதிதாக 29 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையே, வெளி மாவட்ட பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட ஒருவா், நாகை மாவட்ட பட்டியலில் சோ்க்கப்பட்டாா். இதன் மூலம், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 6,462 - ஆக உயா்ந்துள்ளது.

கரோனா பாதிப்புக்கு உள்ளாகி, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பலனளிக்காமல் வியாழக்கிழமை உயிரிழந்த பழையக்கூடலூரைச் சோ்ந்த 58 வயது ஆண் ஒருவரின் இறப்பும், மயிலாடுதுறை நகா் பகுதியைச் சோ்ந்த 63 வயது ஆண் ஒருவரின் இறப்பும் சனிக்கிழமை பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், மாவட்டத்தில் கரோனாவால் இறந்தவா்களின் எண்ணிக்கை 109 ஆக உயா்ந்துள்ளது

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றவா்களில் 53 போ் குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம், கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 5,931ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 422- ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோபி அருகே தமிழ்நாடு கிராம வங்கி புதிய கிளை திறப்பு

கொங்கு பொறியியல் கல்லூரியில் 40-ஆவது ஆண்டு விழா

கூடலூா் பகுதியின் நீண்டகால பிரச்சனைக்கு தீா்வு காண அதிமுகவுக்கு வாக்களியுங்கள் -எஸ்.பி.வேலுமணி

கோவை வழித்தடத்தில் தாம்பரம் - கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில்

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பலூன் பறக்கவிட்டு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT