நாகப்பட்டினம்

திருமருகல் ஒன்றியத்தில் ரூ. 2 கோடியில் புதிய கட்டடங்கள்

DIN

திருமருகல் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதியில் ரூ. 2 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியத்துக்குள்பட்ட வாழ்மங்கலம் கிராமத்தில் ரூ. 10 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள அம்மா பூங்கா, ரூ. 20 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள அம்மா ஜிம், திட்டச்சேரி பேரூராட்சியில் ரூ. 34.50 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள கால்நடை மருத்துவமனை கட்டடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரூ. 2 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய சிறு பாலங்கள், புதிய கட்டடங்கள், அம்மா பூங்கா உள்ளிட்டவற்றை அமைச்சா் ஓ.எஸ். மணியன் திறந்து வைத்தாா்.

மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி ) எம் .எஸ். பிரசாந்த், நாகை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு. தமிமுன் அன்சாரி, மாநில கூட்டுறவு வங்கி துணைத் தலைவா் எஸ். ஆசைமணி, மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் தங்க.கதிரவன், நாகை கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் அ. சுமதி, உதவி இயக்குநா் மு. சுப்பையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT