நாகப்பட்டினம்

சீர்காழி அருகே இடி தாக்கி மின்சாதனப் பொருள்கள் சேதம்

30th Nov 2020 11:05 AM

ADVERTISEMENT

சீர்காழி அருகே இடி தாக்கி மின்சாதனப் பொருள்கள் சேதமடைந்தனர்.
சீர்காழி நவம்பர் 30 சீர்காழி அருகே காரைமேடு ஊராட்சி மேலச்சாலை பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் ஷேக் அலாவுதீன்(55 ). நேற்று இரவு சீர்காழி பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்தது. 
அப்போது ஷேக் அலாவுதீன் வீட்டின் முன்பு இருந்த போர்டிகோவில் இடி தாக்கியது. இதில் வீட்டின் சுவர் மற்றும் போர்டிகோ ஆகியவை சேதமடைந்தன. 
அதோடு போர்டிகோவில் கீழே இருந்த மின் மீட்டர் பாதிப்பு ஏற்பட்டு வீட்டிலிருந்த மின்சாதனப் பொருட்களும் முற்றிலும் தேமடைந்தன.

Tags : nagai
ADVERTISEMENT
ADVERTISEMENT