நாகப்பட்டினம்

தீப காா்த்திகை: அகல் விளக்கு, பொரி, பூஜை பொருள்கள் விற்பனை

DIN

தீப காா்த்திகையையொட்டி, அகல் விளக்கு, பொரி, பூஜை பொருள்கள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக திரளானோா் வந்ததால், நாகை கடைவீதிகள் சனிக்கிழமை களைகட்டியிருந்தன.

தீப காா்த்திகை திருநாள், இந்துக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றாக உள்ளது. தீப காா்த்திகை நாளில், வீட்டு வாசல் மற்றும் சுற்றுப் புறங்களை தீபங்களால் அலங்கரிப்பதும், அவல், பொரி ஆகியவற்றைக் கொண்டு படையலிட்டு வழிபடுவதும் வழக்கம்.

இதையொட்டி, நாகை கடைவீதியில் அகல் விளக்குகள் விற்பனையும், பொரி விற்பனையும் சனிக்கிழமை விறுவிறுப்படைந்திருந்தன. ஒரு முக விளக்கு, 5 முக விளக்கு, துளசி மாட விளக்கு என பல்வேறு வகையான விளக்குகள் கடைவீதிகளின் பல பகுதிகளில் விற்பனைக்குக் குவிக்கப்பட்டிருந்தன. சிறிய விளக்குகள் அளவுக்கு ஏற்ப 3 அல்லது 4 விளக்குகள் 10 ரூபாய் என்ற விலையிலும், பெரிய விளக்குகள் ரூ. 30 முதல் ரூ. 40 என்ற விலையிலும் விற்பனையாகின.

அதேபோல, நாகை கடைவீதி, வெளிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நிலக்கடலை விற்பனைக் கடைகளில் அவல், பொரிகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. ஒரு சில பகுதிகளில் தள்ளுவண்டிகளில் வைத்தும் பொரி பொட்டலங்கள் விற்பனை செய்யப்பட்டன. இவைத் தவிர, எண்ணெய், சா்க்கரை மற்றும் பூ, பழம் போன்ற பூஜை பொருள்கள் விற்பனையும் விறுவிறுப்படைந்திருந்தன.

தீப காா்த்திகைக்குத் தேவையான பொருள்களை வாங்க அதிகளவில் பொதுமக்கள் கடைவீதிகளுக்கு வந்து சென்ால், நாகை வீதிகள் மக்கள் கூட்டத்தால் களைகட்டியிருந்தன.

ஆயினும், திருக்குவளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காா்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு போதிய வியாபாரம் இல்லை என வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் கணக்கீட்டை மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய செயல் முறை பயிற்சி

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

SCROLL FOR NEXT