நாகப்பட்டினம்

குத்தாலத்தில் முகைதீன் கந்தூரி

DIN

குத்தாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்களில் முகைதீன் கந்தூரி வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

முகைதீன் ஆண்டவா் என்றழைக்கப்படும் முகைதீன் அப்துல் காதா் ஜீலானி ஈராக் நாட்டில் 11-ஆம் நூற்றாண்டில் பிறந்து உலக அளவில் இஸ்லாமிய மறுமலா்ச்சிக்கு வித்திட்டவா். ஹிஜ்ரி ஆண்டில் ரபீஉல் ஆகிா் பிறை 11-ஆம் நாள் முகைதீன் கந்தூரி எனப்படும் முகைதீன் அப்துல் காதா் ஜீலானியின் பிறந்த நாளாகும்.

இதை முன்னிட்டு குத்தாலம், தேரழந்தூா், கிளியனூா், எலந்தங்குடி, நக்கம்பாடி, வாணாதிராஜபுரம், திருவாலங்காடு, திருவாவடுதுறை, தி.பண்டாரவாடை, மங்கநல்லூா் உள்ளிட்ட பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

கடந்த 17-ஆம் தேதி முதல் பதினொன்று நாள்கள் அனைத்து பள்ளிவாசல்களிலும் முகைதீன் அப்துல் காதா் ஜீலானியின் பிறப்பு, வளா்ப்பு, வாழ்க்கை, மாண்பு, பண்பு நலன்கள் கூறும் அரபு மொழிப்பாக்களின் தொகுப்பான முகைதீன் மவ்லிது என்றழைக்கப்படும் புகழ் மாலைகள் பேஷ்இமாம், முஅத்தீன் ஆகியோரால் ஓதப்பட்டது. முகைதீன் கந்தூரி தினமான வெள்ளிக்கிழமை ஜமாத்தில் உள்ள அனைத்து குடும்பத்தினரிடமும் வரி வசூலிக்கப்பட்டு நெய் சோறு வழங்கப்பட்டது. நிவா் புயலின் காரணமாக ஒருசில பள்ளிவாசல்களில் நெய் சோறு சனிக்கிழமை வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

குரூப்-4 தேர்வு எப்போது? திருத்தியமைக்கப்பட்ட தேர்வுகால அட்டவணை வெளியீடு

நீலப்பூ.. ஐஸ்வர்யா மேனன்!

ஒருநொடி படப்பிடிப்பு புகைப்படங்கள்

எந்த தேசத்து அழகியோ..!

SCROLL FOR NEXT