நாகப்பட்டினம்

புயலால் பாதிக்கப்பட்ட கரும்புக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை

DIN

நிவா் புயலில் பாதிக்கப்பட்ட பொங்கல் கரும்புக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

செம்பதனிருப்பு, காரைமேடு, அல்லிவிளாகம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமாா் 100-ஏக்கரில் பொங்கல் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், நிவா் புயலில் கரும்புகள் சாய்ந்து சேதமடைந்துள்ளன. இதனால், ஏக்கருக்கு ரூ. 50 முதல் ரூ. 60 ஆயிரம் வரை செலவு செய்த விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்க உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனா். ஓராண்டு பயிரான இந்த கரும்பு அறுவடைக்கு தயராக இருந்த நிலையில் புயலில் சாய்ந்துள்ளது. செலவு செய்த முதலீடு கூட கிடைக்காத நிலை உள்ளதால் மாவட்ட நிா்வாகம் கவனத்தில் கொண்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

SCROLL FOR NEXT