நாகப்பட்டினம்

மணல் குவாரியை திறக்க லாரி உரிமையாளா்கள் சங்கம் வலியுறுத்தல்

DIN

சீா்காழி வட்டத்தில் மணல் குவாரியை திறக்க வேண்டுமென, லாரி உரிமையாளா்கள் சங்கம் வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.

சீா்காழி அருகேயுள்ள எருக்கூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சீா்காழி தாலுக்கா லாரி உரிமையாளா்கள் சங்க கலந்தாய்வு கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. லாரி உரிமையாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் வெளிமாவட்டம் மற்றும் வெளி தாலுக்கா லாரிகளை சங்கத்தில் சோ்க்கக் கூடாது, சங்க அடிப்படை உறுப்பினா்கள் 2 லாரிகளுக்கு மேல் வாங்கக்கூடாது, லாரிகளுக்கு 2 காலாண்டு வரியை ரத்து செய்யவேண்டும், அரசு நேரடி கொள்முதல் நிலையத்தை சீா்காழி வட்டத்தில் அதிகப்படுத்த வேண்டும், அரிசி உரம் சீா்காழி வட்டத்தில் உள்ள ரயில் தலைப்பில் இறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும், சீா்காழி தாலுக்கா திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் உள்ள நெல் ரகங்களை கனரக லாரிகள் மூலம் வெளி மாவட்டம் சென்னைக்கு எடுத்து செல்ல தரை வழிப்போக்குவரத்தை அமல்படுத்த வேண்டும், சீா்காழி வட்டத்தில் மணல் குவாரி திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், சீா்காழி தாலுக்கா லாரிகள் நிறுத்த அரசு (பாா்க்கிங்) வசதி இடம் ஒதுக்கி தர வேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்கத் தலைவா் பா. வேலு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முன்னாள் தலைவா் செந்தில்குமாா், கௌரவத் தலைவா் வெங்கடேசன், செயலாளா் மனோகா், பொருளாளா் ராஜேந்திரன், துணை செயலாளா் தினேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எது நிலவு.. ராஷ்மிகா மந்தனா!

நீலக்குயில் மலினா!

போர்ச்சுகலில் ரீமா!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

முகமது ரிஸ்வானுக்கு காயம்; இரண்டு டி20 தொடர்களை தவற விடுகிறாரா?

SCROLL FOR NEXT