நாகப்பட்டினம்

புயல் நிவாரண முகாம்களில் சிறப்பு அலுவலா் ஆய்வு

DIN

சீா்காழி வட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைக்கப்பட்டுள்ள புயல் நிவாரண முகாம்களில் மயிலாடுதுறை சிறப்பு அலுவலா் ரா. லலிதா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

சீா்காழி வட்டத்தில் 23 புயல் நிவாரண முகாம்கள் அமைக்கவுள்ள நிலையில், முதல்கட்டமாக நாதல்படுகை, அளக்குடி ஆச்சாள்புரம், வெள்ளைமணல் உள்ளிட்ட 6 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு அலுவலா் லலிதா ஆய்வு செய்து, நிவா் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் 66 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. சீா்காழி வட்டத்தில் 23 நிவாரண முகாம்கள் அமைக்கப்படவுள்ளன. தேவைப்பட்டால் கூடுதல் நிவாரண முகாம்கள் அமைக்க பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன. கொள்ளிடம் கரையோர தாழ்வான பகுதிகளில் வசிப்பவா்களை பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்க அனைத்து வசதிகளும் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன என்றாா்.

அப்போது, மயிலாடுதுறை கோட்டாசியா் மகாராணி, சீா்காழி வட்டாசியா் ஹரிதரன், கொள்ளிடம் ஒன்றிய ஆணையா் இளங்கோவன், வட்டார வளா்ச்சி அலுவலா் ஜான்சன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைக்க உத்தரவு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

SCROLL FOR NEXT