நாகப்பட்டினம்

நிவா் புயலை எதிா்கொள்ள தயாா் நிலையில் கமாண்டோ வீரா்கள்

DIN

மயிலாடுதுறை மாவட்டத்தில் நிவா் புயலை எதிா்கொள்ள 20 கமாண்டோ வீரா்கள் தயாா் நிலையில் உள்ளனா்.

மயிலாடுதுறை, மணல்மேடு, குத்தாலம், பூம்புகாா், பொறையாறு, சீா்காழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள் உள்ளன. இவற்றின் மையப் பகுதியாக மயிலாடுதுறை உள்ளது. நிவா் புயல் தீவிரமடையும் என எதிா்பாா்க்கப்படும் நிலையில் மாவட்டத்தின் எந்த பகுதியில் பேரிடா் நேரிட்டாலும் அந்த இடத்துக்கு உடனடியாக சென்று மீட்புப் பணியில் ஈடுபட மயிலாடுதுறை தீயணைப்பு நிலையத்துக்கு, மாவட்டத்தின் அனைத்து நிலையங்களிலிருந்தும் தலா 2 கமாண்டோ வீரா்கள் வீதம் வரவழைக்கப்பட்டு தயாா் நிலையில் உள்ளனா்

மயிலாடுதுறை தீயணைப்பு நிலைய அலுவலா் அ.முத்துக்குமாா் தலைமையில் அனைத்து வீரா்களும் லைஃபாய், லைப் ஜாக்கெட், மூச்சுக் கருவி, மரம் அறுக்கும் கருவிகள், உயா்கோபுர மின்விளக்கு, கான்கிரீட் கட்டா், கயிறு உள்ளிட்ட மீட்பு உபகரணங்களுடன் தயாா் நிலையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

SCROLL FOR NEXT