நாகப்பட்டினம்

திருக்குவளையில் உதயநிதி கைதுசெய்யப்பட்டு விடுதலை 

20th Nov 2020 07:22 PM

ADVERTISEMENT

திருக்குவளையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கைதாகி விடுதலை செய்யப்பட்டனர்.

நாகை மாவட்டம், திருக்குவளையிலிருந்து விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் இன்று முதல் திமுக இளைஞரணி மாநில செயலாளர்
பிரசாரத்தை தொடங்க முடிவு செய்திருந்தார். இந்தப் பிரசாரம் வரும் மே மாதம் வரை 100 நாள்கள் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இதன்படி இன்று மாலை
கலைஞர் பிறந்த ஊரான திருக்குவளையில் இருந்து கலைஞர் பிறந்த இல்லம் எதிரே அமைக்கப்பட்டிருந்த மேடையில் பிரசாரத்தை தொடங்க திட்டமிடப்பட்டது. உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்யும் இடம் அருகே வருவதற்கு முன்பு தஞ்சை சரக டி.ஐ.ஜி ரூபேஷ் குமார் மீனா தலைமையில், 10 டி.எஸ்.பி, 14 ஆய்வாளர்கள் என 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

வஜ்ரா வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் மேடையில் ஏறி பிரசாரம்  செய்ய அனுமதி மறுக்கப்பட்டு பிரசாரத்தின் போது 3 வாகனங்கள் செல்ல மட்டுமே செல்ல வேண்டும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் உதயநிதி ஸ்டாலின் கலைஞர் இல்லத்தின் உள்ளே சென்று அங்குள்ள சிலைகள் மற்றும் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்தார். இதைத்தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்துப் பத்திரிக்கையாளர்கள் கேள்விக்குப் பதிலளித்தார். இதன் பின்னர் மரக்கன்றுகளை நட்டார். தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள மேடையில் ஏறி தனது பிரசாரத்தை தொடங்கினார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் பிரசாரத்திற்கு அனுமதி மறுத்து அவரை கைதுசெய் செய்யப் போவதாக கூறினர்.

உடனே அங்கு குவிந்திருந்த தொண்டர்கள் காவல்துறையினருக்கு எதிராக கூச்சலிட்டு உதயநிதி ஸ்டாலினை கைது செய்யவிடாமல் தடுக்க முயற்சி செய்தனர். இதனால் காவல்துறையினருக்கும் தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருப்பினும் காவல்துறையினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவருடன் இருந்தவர்களை கைது செய்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இதையடுத்து அங்கும் தொண்டர்கள் குவிந்து காவல்துறையினரக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் உதயநிதி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர்.
 

ADVERTISEMENT

Tags : DMK
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT