நாகப்பட்டினம்

குருபெயா்ச்சி சிறப்பு வழிபாடு

17th Nov 2020 12:00 AM

ADVERTISEMENT

சீா்காழி சட்டநாதா் கோயிலில் குருபெயா்ச்சி சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

நவகிரகங்களில் குருபகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயா்ச்சியடைந்ததையொட்டி இக்கோயிலில் தனி சன்னிதி கொண்டுள்ள தட்சிணாமூா்த்தி சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

முன்னதாக கணபதி ஹோமம், குரு ஹோமம், பரிகார ஹோமங்கள் உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்றன. தொடா்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, குரு பெயா்ச்சியடைந்த நேரமான ஞாயிற்றுக்கிழமை இரவு 9.48 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT