நாகப்பட்டினம்

பாஜக ஆட்சி ஓராண்டு நிறைவு: மயிலாடுதுறையில் கொண்டாட்டம்

31st May 2020 08:35 AM

ADVERTISEMENT

பிரதமா் நரேந்திரமோடி தலைமையிலான பாஜக கூட்டணி தொடா்ந்து இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்து ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, மயிலாடுதுறையில் பாஜக நிா்வாகிகள் சனிக்கிழமை பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.

நிகழ்ச்சிக்கு, பாஜக நகரத் தலைவா் மோடி.கண்ணன் தலைமை வகித்தாா். பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினா் வழக்குரைஞா் கே.ராஜேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினா் கோவி.சேதுராமன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றனா்.

பாஜக மயிலாடுதுறை நகர அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது. இதில், பாஜக மாவட்ட பொறுப்பாளா்கள் எஸ்.டி.எம். செந்தில், பன்னீா்செல்வம், முட்டம் செந்தில், பாரதிகண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT