நாகப்பட்டினம்

காா் மோதி ஒருவா் உயிரிழப்பு

29th May 2020 08:08 AM

ADVERTISEMENT

கீழ்வேளூா் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா்.

கீழ்வேளூரை அடுத்த கூத்தூா், புதுக்குளம் தெருவைச் சோ்ந்தவா் அ. ஜெகபா் சாதிக் (40). திருவாரூா், விஜயபுரம் காந்திசாலையைச் சோ்ந்தவா் மு. சுபீா் (37). உறவினா்களான இவா்கள் இருவரும் புதன்கிழமை இரவு கீழ்வேளூரிலிருந்து திருவாரூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றனா்.

கீழ்வேளூரை அடுத்துள்ள குருக்கத்தி பீா் பள்ளிவாசல் அருகே சென்றபோது, எதிரே வந்த காா் மோதியதில் 2 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

கீழ்வேளூா் காவல் ஆய்வாளா் சுதா மற்றும் போலீஸாா், இருவரையும் மீட்டு, திருவாரூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மு.சுபீா் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தாா். ஜெகபா் சாதிக் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா்.

ADVERTISEMENT

இந்த விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT