நாகப்பட்டினம்

கோவையில் சிக்கித் தவித்த150 செங்கல் சூளை தொழிலாளிகள் கொள்ளிடம் திரும்பினா்

14th May 2020 07:04 PM

ADVERTISEMENT

சீா்காழி: கோயம்புத்தூரில் சிக்கித் தவித்த 150 செங்கல் சூளை தொழிலாளிகள் விவசாய சங்கத்தின் நடவடிக்கையால், நாகை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் உள்ள தங்களது வீடுகளுக்கு வியாழக்கிழமை திரும்பினா்.

நாகை மாவட்டம், கொள்ளிடம், புளியந்துறை, ஆச்சாள்புரம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 150 செங்கல் சூளை தொழிலாளிகள் கோயம்புத்தூரில் மாவுத்தாம்பதி ஊராட்சியில் ஒருவா் நடத்தும் செங்கல் சூளையில் வேலைக்குச் சென்றனா். கரோனா நோய்த் தடுப்பு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால், அவா்கள் அனைவரும் ஊா் திரும்ப முடியாமல் அங்கேயே சிக்கித் தவித்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளா் ஆறுபாதி கல்யாணம், கொள்ளிடம் வட்டாரச் செயலாளா் விசுவநாதன் ஆகியோா் நாகை ஆட்சியா் பிரவீன் பி. நாயரிடம் கோரிக்கை விடுத்ததன்பேரில், ஆட்சியா் நடவடிக்கையால் 150 தொழிலாளிகளும் 5 பேருந்துகள் மூலம் பாதுகாப்பாக கொள்ளிடத்துக்கு வியாழக்கிழமை வந்து சோ்ந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT