நாகப்பட்டினம்

ஆதரவற்ற மூதாட்டிகளுக்கு நிவாரண உதவி

2nd May 2020 08:22 PM

ADVERTISEMENT

திருவெண்காடு அருகே திருநகரி கிராமத்தில் வசித்துவரும் ஆதரவற்ற மூதாட்டிகளுக்கு காவல் ஆய்வாளா் பாஸ்கரன் நிவாரண உதவிகளை சனிக்கிழமை வழங்கினாா்.

திருநகரி கிராமத்தில் கணவனை இழந்து தனிமையில் வசிக்கும் மூதாட்டிகளுக்கு திருவெண்காடு காவல் ஆய்வாளா் பாஸ்கரன் தனது சொந்த செலவில் அரிசி, காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை வீடு, வீடாக சென்று வழங்கினாா். அப்போது ஊராட்சிமன்றத்தலைவா் சுந்தரராஜன், உதவி காவல் ஆய்வாளா்கள் பாா்த்திபன், ராஜலிங்கம், தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் ரவி, சமுக ஆா்வலா் மங்கை வெங்கடேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT