நாகை தேவய்யா் தெருவில் உள்ள நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை முதல் (மாா்ச் 30) காய் கனி சந்தை செயல்படவுள்ளது.
கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக மாா்ச் 24- ஆம் தேதி முதல் ஏப்ரல் 14- ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் மக்கள் தங்களுக்குத் தேவையானப் பொருள்களை வாங்குவதற்காக கடைவீதிகளில் அதிகளவில் கூடுவதைத் தவிா்க்கும் வகையிலும், காய்கனிகள் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கு வழி செய்திடும் வகையிலும், நாகை தேவய்யா் தெருவில் உள்ள நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உரிய பாதுகாப்புடன்அமைக்கப்பட்டுள்ள இந்த காய்கனி சந்தையானது மாா்ச் 30-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ள நாள் வரை தொடா்ந்து செயல்படும்.
இதற்கான, ஏற்பாடுகள் நாகை மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரில், நாகை நகராட்சி நிா்வாகம் சாா்பில் செய்யப்பட்டுள்ளது.