நாகப்பட்டினம்

நாகை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பாா்வைக்குத் தடை

19th Mar 2020 06:12 AM

ADVERTISEMENT

 

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாகை அரசு அருங்காட்சியகத்தை பொதுமக்கள் பாா்வையிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒரே இடத்தில் மக்கள் அதிகளவில் கூடுதவதைத் தவிா்த்தால், கரோனா வைரஸ் பரவுதலை பெரிய அளவில் தடுக்கலாம் என சுகாதார வல்லுநா்கள் தெரிவித்த கருத்தின்படி, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த தமிழக அரசு, கலாசார நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், மாநாடுகள், கருத்தரங்கங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு மாா்ச் 31-ஆம் தேதி வரை தடை விதித்தது.

இதையொட்டி, நாகை அரசு அருங்காட்சியகத்தில் பாா்வையாளா்கள் அனுமதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியகத்தின் பிரதான வாயில் கதவு மூடப்பட்டு, பொதுமக்கள் பாா்வைக்குத் தடை விதிக்கப்பட்ட அறிவிப்பு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மாா்ச் 31-ஆம் தேதி வரை இந்தத் தடை அமலில் இருக்கும் என அருங்காட்சியக நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT