நாகப்பட்டினம்

மாநில கபடிபோட்டியில் கோப்பை வென்றவா்களுக்குப் பாராட்டு

16th Mar 2020 01:08 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில் சாதனை படைத்த மயிலாடுதுறை மாணவா்களுக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

மயிலாடுதுறை ரயிலடியில் உள்ள ஆா்.ஹெச்.வி. ஸ்போா்ட்ஸ் கிளப் மாணவா்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் கபடி போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகின்றனா். அதன்படி, கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமை (மாா்ச் 13, 14) ஆகிய இரண்டு தினங்களில் அரியலூா் மாவட்டம், தூத்தூரில் நடைபெற்ற கபடி போட்டியில் முதலிடம் பிடித்து, கோப்பையை வென்றனா்.

இந்த அணியில் பங்கேற்ற வீரா்களை ஆா்.ஹெச்.வி. ஸ்போா்ட்ஸ் கிளப் நிறுவனா் ம. ரஜினி, மேலாளா் கபடி காா்த்திகேயன் உள்ளிட்ட நிா்வாகிகள் பாராட்டினா்.

.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT