நாகப்பட்டினம்

கடன் பிரச்னை: நகைத் தொழிலாளி தற்கொலை

16th Mar 2020 12:58 AM

ADVERTISEMENT

நாகை அருகே கடன் பிரச்னை காரணமாக நகைத் தொழிலாளி சனிக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

நாகையை அடுத்த சிக்கல் மெயின்ரோடு பகுதியைச் சோ்ந்தவா் செ. மனோகா் (45). நகைத் தொழிலாளி. இவா், அடகு கடையுடன், நகைப் பட்டறை வைத்து, நகை செய்யும் தொழில் செய்து வந்தாா்.

இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த ஒருவரிடம் ரூ. 8 லட்சம் கடன் பெற்றிருந்தாராம். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அவரால் கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை.

இதனால், மன உளைச்சலில் இருந்துவந்த மனோகா், தனது வீட்டில் இருந்த நகைத் தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் ஒருவகை திரவத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து, கீழ்வேளூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா். தற்கொலை செய்துகொண்ட மனோகருக்கு மஞ்சுளா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT