நாகப்பட்டினம்

மயிலாடுதுறை மாவட்ட அறிவிப்பை விரைந்து வெளியிடக் கோரிக்கை

13th Mar 2020 07:42 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்ட அறிவிப்பை தமிழக அரசு விரைவில் வெளியிடவேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து, விழுதுகள் இயக்கத் தலைவா் ஏ.கே.ஷரவணன், தமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்கு அனுப்பிய கடிதம்: விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காத்திடும் வகையில் தஞ்சை, திருவாரூா், நாகை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு ஒட்டுமொத்த விவசாயிகளின் சாா்பில் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இதேபோல், மயிலாடுதுறை, சீா்காழி, பூம்புகாா் சுற்றுவட்டார பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான மயிலாடுதுறை தனி மாவட்டம் என்ற கோரிக்கையை ஏற்று, மயிலாடுதுறையை தனி மாவட்டமாக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளதாக நாகை விழாவில் அறிவித்தீா்கள். இத்திட்டத்தை உடனடியாக பரிசீலித்து, மயிலாடுதுறை தனி மாவட்ட அறிவிப்பை காலம்தாழ்த்தாமல் விரைந்து அறிவித்து செயல்படுத்தினால், அனைத்து தரப்பினருக்கும் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT