நாகப்பட்டினம்

நெல் தரிசு பருத்திப் பயிருக்கு காப்பீடு செய்ய அழைப்பு

13th Mar 2020 07:45 AM

ADVERTISEMENT

திருமருகல் வட்டார விவசாயிகள், நெல் தரிசில் சாகுபடி செய்துள்ள பருத்திப் பயிருக்கு மாா்ச் 31-ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து கொண்டு பயன்பெறலாம் என திருமருகல் வேளாண்மை உதவி இயக்குநா் க. சிவக்குமாா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிரதம மந்திரியின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கி பாதுகாக்க, நெல் தரிசில் பருத்திப் பயிருக்கு காப்பீடு செய்து கொள்ள வேண்டும். இத்திட்டத்தில் பதிவு செய்ய மாா்ச் 31-ஆம் தேதி கடைசி நாளாகும். விவசாயிகள் கடைசி நேர நெரிசலைத் தவிா்க்கவும், விவசாயிகளின் விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும் , பிரதம மந்திரியின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீட்டுத் தொகை செலுத்தி முன்கூட்டியே பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ஏக்கருக்கு ரூ.1,240 காப்பீடு கட்டணம் செலுத்த வேண்டும். விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது, முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் அடங்கல், வங்கி கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து கட்டணத் தொகையை செலுத்திய பின், அதற்கான ரசீதை பொது சேவை மையங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT