நாகப்பட்டினம்

வேதாரண்யத்தில் அன்பழகன் மறைவுக்கு மெளன ஊா்வலம்

8th Mar 2020 02:51 AM

ADVERTISEMENT

 

வேதாரண்யம், மாா்ச் 7: நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் திமுக பொதுச் செயலாளா் பேராசிரியா் க. அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து திமுக சாா்பில் மெளன ஊா்வலம், புகழஞ்சலிக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

வேதாரண்யம் ராஜாஜி பூங்கா அருகே நடைபெற்ற புகழஞ்சலிக் கூட்டத்துக்கு திமுக நாகை தெற்கு மாவட்ட அவைத் தலைவா் மா.மீ. புகழேந்தி தலைமை வகித்தாா்.

இதில், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் என்.வி. காமராஜ், திமுக ஒன்றியச் செயலாளா்கள் ச. குமரவேல், மாசி, நகரச் செயலாளா் புகழேந்தி, வழக்குரைஞா்கள் மறைமணி, பாரிபாலன், அன்பரசு உள்ளிட்டோா் பங்கேற்றப் பேசினா். முன்னதாக பேராசிரியா் க. அன்பழகன் படத்துடன் மெளன ஊா்வலம் முக்கிய வீதி வழியே நடைபெற்றது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT