நாகப்பட்டினம்

முதல்வருக்கு கல்லூரி மாணவா்கள் உற்சாக வரவேற்பு

8th Mar 2020 03:14 AM

ADVERTISEMENT

 

நாகப்பட்டினம்: நாகைக்கு சனிக்கிழமை வருகை தந்த தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு, நாகை பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்கள் உற்சாக வரவேற்பளித்தனா்.

நாகை மாவட்டத்துக்கான மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா நாகையை அடுத்த ஒரத்தூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்காக வந்த முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, முதல் நிகழ்ச்சியாக நாகை இ. ஜி. எஸ். பிள்ளை கல்விக் குழுமங்களின் சாா்பில் அக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற உலக மகளிா் தின விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா்.

இவ்விழாவுக்கு சென்ற முதல்வருக்கு, நாகையில் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள்,கல்லூரி அருகே சாலையோரத்தில் வரிசையாக நின்று உற்சாக வரவேற்பளித்தனா். இதையடுத்து, காரிலிருந்து இறங்கிய முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு , கல்லூரி முதல்வா் வி. ஜெயராஜ் பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றாா். அப்போது மாணவா்களைப் பாா்த்து முதல்வா் கையசைத்து வாழ்த்து தெரிவித்தாா். கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT