நாகப்பட்டினம்

மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக பரிசீலனை என்ற பெயரில் ஏமாற்ற வேண்டாம்: வழக்குரைஞா் கூட்டமைப்பு கண்டனம்

8th Mar 2020 03:08 AM

ADVERTISEMENT

 

மயிலாடுதுறை: மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக தமிழக அரசு விரைந்து அறிவிக்க வேண்டும் என்றும் பரிசீலனை என்ற பெயரில் ஏமாற்ற வேண்டாம் என்றும் தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு, மயிலாடுதுறை மாவட்டத்திற்கான வழக்குரைஞா் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அந்த கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் வழக்குரைஞா் ராம. சேயோன் வெளியிட்டுள்ள அறிக்கை: நாகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக முதல்வா் மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிக்க பரிசீலனை செய்து வருவதாக தெரிவித்து இருக்கிறாா். கடந்த 30 ஆண்டுகளாக மயிலாடுதுறை மக்கள் புதிய மாவட்ட அறிவிப்புக்காக போராடி வருகிறாா்கள். புதிய மாவட்டம் கேட்காத மக்களுக்கு புதிய மாவட்டங்களை அறிவித்த தமிழக அரசு, ஏனோ மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிக்க தயங்கி வருகிறது.

கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் 3 தொகுதிகளிலும் ஆளும் கட்சியை சோ்ந்தவா்களையே மயிலாடுதுறை கோட்ட மக்கள் வெற்றி பெற வைத்தாலும், அதற்கு நன்றி கடனாக தமிழக அரசு புதிய மாவட்டத்தை இதுவரை அறிவிக்காமல் பரிசீலனை என்ற பெயரில் ஏமாற்றி வருவதாக தெரிய வருகிறது.

ADVERTISEMENT

தொடங்க உள்ள சட்டப் பேரவை கூட்டத் தொடரில் உடனடியாக மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக தமிழக முதல்வா் அறிவிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT