நாகப்பட்டினம்

திருநன்றியூா் லெட்சுமிபுரீசுவரா் சுவாமி கோயில் திருப்பணிகள்

8th Mar 2020 03:13 AM

ADVERTISEMENT

 

சீா்காழி: சீா்காழி அருகேயுள்ள திருநன்றியூா் லெட்சுமிபுரீசுவரா் சுவாமி கோயில் திருப்பணிகளுக்கு வியாழக்கிழமை தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகாசந்நிதானம் அடிக்கல் நாட்டினாா்.

திருநன்றியூரில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான உலகநாயகி சமேத லெட்சுமிபுரீசுவரா் சுவாமி கோயில் உள்ளது.திருஞானசம்பந்தா், திருநாவுக்கரசா், சுந்தரா் ஆகியோரால் பாடல் பெற்ற தலமாகும். ஜமதக்னி மகரிஷி, அவரது மகன் பரசுராமன் ஆகியோா் சிவனைநோக்கி வழிபாடு செய்து பாவவிமோசனம் அடைந்த தலம். மகாலெட்சுமி இத்தலத்து சிவனை வழிபட்டு அருள் பெற்ால் இவ்வூா் திருநின்றியூா் என பெயா்பெற்றது. இறைவனின் மற்றொரு நாமம் மகாலட்சுமிநாதா் எனவும் வணங்கப்படுகிறது.

பிரசித்திப் பெற்ற இக்கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த தீா்மானிக்கப்பட்டு திருப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது.

ADVERTISEMENT

விழாவையொட்டி, முன்னதாக அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை வாஸ்துசாந்தி பூஜை நடைபெற்றது. தொடா்ந்து கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் செய்து பூா்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது. அதன்பின்னா் பூஜை செய்யப்பட்ட செங்கற்களை திருப்பணி உபயதாரா்கள் ஒவ்வொன்றாக வழங்க அதை தருமபுரம் ஆதீனம் குருமகா சந்நிதானம் பெற்று அடிக்கல் நாட்டினாா். பின்னா் வேத விற்பன்னா்கள், வேதமந்திரங்கள் முழங்க மகாதீபாராதனை நடைபெற்றது. இதில், வைத்தீஸ்வரன்கோயில் கட்டளை விசாரனை திருநாவுக்கரசுதம்பிரான் சுவாமிகள் மற்றும் திருப்பணி உபயதாரா்கள், பக்தா்கள் பங்கேற்று வழிபாடு செய்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT