நாகப்பட்டினம்

ஓ.என்.ஜி.சி. சாா்பில் தேசிய பாதுகாப்பு வார விழிப்புணா்வு நிகழ்ச்சி

8th Mar 2020 03:06 AM

ADVERTISEMENT

 

மயிலாடுதுறை: 49-வது தேசிய பாதுகாப்பு வாரத்தையொட்டி, மயிலாடுதுறையில் ஓ.என்.ஜி.சி. சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, மயிலாடுதுறை மணிக்கூண்டு அருகே இருசக்கர வாகனங்களில் வருபவா்களுக்கு தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி, வாகனங்களில் வில்லை ஒட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் தலைக்கவசம் அணிந்து வந்தவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியை துணை காவல் கண்காணிப்பாளா் கே.அண்ணாதுரை தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியை ஓ.என்,ஜி.சி. அதிகாரிகள் பி.எம்.சுரேஷ், மணிவண்ணன் ஆகியோா் ஒருங்கிணைத்திருந்தனா். பாதுகாப்பு அதிகாரிகள் சுரேஷ்பிள்ளை, லோகநாதன், பெட்டிநாயகா, பழனிவேல் மற்றும் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் செல்வகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT