நாகப்பட்டினம்

மூகாம்பிகை கோயில் பிரமோத்ஸவ விழா

6th Mar 2020 07:46 AM

ADVERTISEMENT

நாகை, ஆா்யநாட்டுத் தெருவில் உள்ள தாய் மூகாம்பிகை கோயிலின் மாசிமக பிரமோத்ஸவ விழா புதன்கிழமை இரவு பூச்சொரிதலுடன் தொடங்கப்பட்டது.

மாசிமக பிரமோத்ஸவ விழாவையொட்டி, புதன்கிழமை காலை கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமம் ஆகியன நடைபெற்றன. இரவு 7 மணி அளவில் சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னா், பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

பிரமோத்ஸவ விழா திருக்கொடியேற்றம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. முன்னதாக, நம்பியாா் நகா் புதிய ஒளி மாரியம்மன் கோயிலிலிருந்து கொடி ஊா்வலம் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக, வரும் ஞாயிற்றுக்கிழமை திருத்தேரோட்டமும், திங்கள்கிழமை காலை நாகை புதிய கடற்கரையில் தீா்த்தவாரியும் நடைபெறுகின்றன.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT