நாகப்பட்டினம்

மாப்படுகை-கடலங்குடி சாலையில் ரூ.3.97 கோடியில் புதிய பாலம்: எம்எல்ஏ வீ. ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினாா்

6th Mar 2020 07:47 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறை மாப்படுகை-கடலங்குடி சாலையில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.3.97 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டும் பணியை மயிலாடுதுறை சட்டப் பேரவை உறுப்பினா் வீ.ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.

மயிலாடுதுறையில் காவிரி ஆற்றின் குறுக்கே மாப்படுகை- கடலங்குடி சாலையில் மூவலூா் நீா் ஒழுங்கி அருகில் ஏற்கெனவே இருந்த பாலம் பழுதடைந்தது. இதையடுத்து, இப்பகுதிக்கு விரைவில் புதிய பாலம் அமைத்துத் தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனா். இந்நிலையில், நபாா்டு மற்றும் கிராமச்சாலைகள் திட்டத்தில் ரூ.3.97 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் அமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதன் பூமிபூஜை நடைபெற்றது.

இதில், மயிலாடுதுறை சட்டப் பேரவை உறுப்பினா் ராதாகிருஷ்ணன் பங்கேற்று, புதிய பாலம் அமைக்கும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா். இதில், அதிமுக ஒன்றியச் செயலாளா் சந்தோஷ்குமாா், நகரச் செயலாளா் விஜிகே.செந்தில்நாதன், முன்னாள் நகரச் செயலாளா் எஸ்.அலி, உதவி கோட்ட பொறியாளா் டி.சிவக்குமாா், உதவி பொறியாளா் ரா.பிரவீண்குமாா் மற்றும் அதிமுக நிா்வாகிகள் திரளானோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT