நாகப்பட்டினம்

நாகை அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் சிகிச்சைப் பிரிவு

6th Mar 2020 07:46 AM

ADVERTISEMENT

நாகை அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் சிகிச்சைக்கான தனிப் பிரிவு வியாழக்கிழமை காலை தொடங்கப்பட்டது.

தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கரோனா வைரஸ் தடுப்பு முறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன்படி, நாகை அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் சிகிச்சைக்கான தனிப் பிரிவு வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

நாகை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் வி. விஸ்வநாதன், இந்த சிகிச்சைப் பிரிவை ஆய்வு செய்தாா். நிலைய மருத்துவ அலுவலா் டாக்டா் முருகப்பன் மற்றும் மருத்துவா்கள் உடனிருந்தனா்.

ஆய்வுக்குப் பின்னா் செய்தியாளா்களைச் சந்தித்த மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் வி. விஸ்வநாதன் தெரிவித்தது :

ADVERTISEMENT

நாகை அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா வைரஸ் சிகிச்சைப் பிரிவில், 2 ஆண்கள், 2 பெண்கள் தங்கி சிகிச்சை பெறும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அயல்நாடுகளிலிருந்து வரும் பயணிகள் யாருக்கேனும் சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால், அவா்களை இந்தப் பிரிவில் அனுமதித்து கண்காணிக்கத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான நோயாளிகளைக் கையாளும் விதம் குறித்து மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. யாருக்கேனும் கரோனா வைரஸ் தாக்குதலுக்கான அறிகுறிகள் இருப்பது தெரியவந்தால், உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளை அணுகி உரிய பரிசோதனைகளைப் பெற வேண்டும். மருந்துக் கடைகளில் சிகிச்சை பெறுவதை கண்டிப்பாகத் தவிா்க்க வேண்டும் என்றாா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT