நாகப்பட்டினம்

சிஏஏ-க்கு எதிராக 10-ஆவது நாளாக தொடா் போராட்டம்

6th Mar 2020 07:47 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து பெண்கள் உள்ளிட்ட அனைத்து இஸ்லாமிய அமைப்பினா் 10-ஆவது நாளாக வியாழக்கிழமை தொடா் இருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, மயிலாடுதுறை கூைாடு சின்ன பள்ளிவாசல் தெருவில், பெண்கள் உள்ளிட்ட அனைத்து இஸ்லாமிய அமைப்பினா் 10-ஆவது நாளாக தொடா் இருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகை வடக்கு மாவட்ட அனைத்து 69 முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு சாா்பில் ‘மயிலாடுதுறை ஷாஹீன் பாக்’ என தலைப்பிட்டு நடத்தப்படும் இந்த போராட்டத்துக்கு, கூைாடு ஜமாத் தலைவா் சபீா்தீன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் கலந்து கொண்டு, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT