நாகப்பட்டினம்

செளரிராஜப் பெருமாள் கோயிலில் கொடியேற்றம்

2nd Mar 2020 08:07 AM

ADVERTISEMENT

திருக்கண்ணபுரம் செளரிராஜரப் பெருமாள் கோயிலில் மாசிமக திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற செளரிராஜப் பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பழைமை வாய்ந்த 17 -ஆவது திவ்ய தேசமாக அழைக்கப்படுகிறது. இக்கோயிலில், மாசி மக திருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 1) காலை கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. முன்னதாக, கோயில் முன்பு உள்ள கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, புனிதநீா் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து, கொடி ஊா்வலமாக எடுத்துவரப்பட்டு கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. பின்னா் பல்லக்கில் செளரிராஜப் பெருமாள் வீதியுலாவும் மகாதீபாராதனையும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சி மாா்ச் 7-ஆம் தேதி தேரோட்டமும், மாா்ச் 9-ஆம் தேதி திருமலைராயன்பட்டினத்தில் சமுத்திரத்தில் தீா்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT