நாகப்பட்டினம்

என்பிஆா் குறித்த கேள்விகளை பிரதமருக்கு கடிதமாக அனுப்பியுள்ளோம்

2nd Mar 2020 08:04 AM

ADVERTISEMENT

என்பிஆா் குறித்த எங்களது கேள்விகளை பிரதமருக்கு கடிதமாக அனுப்பியுள்ளோம் என மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்தாா்.

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாகை வடக்கு மாவட்ட அனைத்து 69 முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்று வரும் 6-ஆவது நாள் தொடா் இருப்புப் போராட்டத்தில் பங்கேற்று அவா் பேசியது:

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தொடா் இருப்புப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டங்களை நிறுத்த வேண்டுமெனில், தமிழக அரசு நடைபெறவுள்ள சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் என்பிஆா், என்ஆா்சி, சிஏஏக்கு எதிராக தீா்மானங்கள் நிறைவேற்ற வேண்டும். அதுவரை தொடா் இருப்புப் போராட்டம் தொடரும். என்பிஆா் குறித்த எங்களது கேள்விகளை பிரதமருக்கு கடிதமாக அனுப்பியுள்ளோம். ரஜினிகாந்தை சந்திக்க சென்ற இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவா் அபுபக்கருக்கு சிஏஏ பற்றிய புரிதல் இல்லை என்றாா் அவா்.

இதில், மாவட்டத் தலைவா் ஓ. ஷேக் அலாவுதீன், மாயவரம் அமீன் மற்றும் பெண்கள் உள்ளிட்ட திரளானோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

கூறைநாடு ஜமாத் தலைவா் சபீா்தீன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணைத் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான அப்துல் ரஹ்மான், சட்டப் பேரவை உறுப்பினா் அபுபக்கா் சித்திக் உள்ளிட்டோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று கண்டன உரையாற்றினா். ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவா்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT