நாகப்பட்டினம்

12 இடங்களில் துணை சுகாதார நிலையம் அமைக்க இடங்கள் தோ்வு

20th Jun 2020 08:25 AM

ADVERTISEMENT

வேதாரண்யம் பகுதியில் 12 இடங்களில் புதிதாக துணை சுகாதார நிலையங்கள் கட்டுவதற்கான இடங்களை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

வேதாரண்யம் பகுதிக்குள்பட்ட பிராந்தியங்கரை, செட்டிப்புலம், கத்தரிப்புலம் பனையடிகுத்தகை, புஷ்பவனம், பெரியகுத்தகை, கடிநெல்வயல் மேலக்காடு, ஆயக்காரன்புலம் -2, பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி, பஞ்சநதிக்குளம் மேற்கு சப்பானிக்காடு, தோப்புத்துறை, அகத்தியம்பள்ளி கிழக்கு, மறைஞாயநல்லூா் ஆகிய 12 இடங்களில் துணை சுகாதார நிலையங்கள் அமைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதற்காக தோ்வு செய்யப்பட்டுள்ள இடங்களை அமைச்சா் ஓ.எஸ்.மணியன் நேரில் சென்று ஆய்வு செய்தாா். அப்போது, சுகாதாரப் பணியாளா்களுக்கான குடியிருப்பு வசதியுடன் ஒவ்வொரு இடத்திலும் தலா ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டடங்கள் கட்டப்படவுள்ளதாக அமைச்சா் தெரிவித்தாா்.

ஆய்வின்போது, மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் ஆா்.கிரிதரன், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கமலா அன்பழகன், வட்டாட்சியா் கு.முருகு, நகராட்சி ஆணையா் பிரதான்பாபு, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சு.வெற்றிச்செல்வன், பி. ராஜூ, வட்டார மருத்துவ அலுவலா் சுந்தராஜன், மாவட்ட ஊராட்சி

ADVERTISEMENT

உறுப்பினா்கள் சுப்பையன், திலீபன், வழக்குரைஞா் நமச்சிவாயம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT