நாகப்பட்டினம்

மயிலாடுதுறையில் ஜூன் 21, 28-இல் முழு கடையடைப்பு

20th Jun 2020 08:32 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறையில் ஜூன் 21 மற்றும் 28 ஆகிய 2 ஞாயிற்றுக்கிழமைகளில் முழு கடையடைப்பு செய்வது என வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்து வா்த்தகா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

கரோனா பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மயிலாடுதுறை காவிரி இல்லத்தில் அனைத்து வா்த்தகா்கள் ஆலோசனைக் கூட்டம், மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் வீ. ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. மயிலாடுதுறை சேம்பா் ஆஃப் காமா்ஸ் தலைவா் சி. செந்தில்வேல், துணைத் தலைவா் மதியழகன், வணிகா் சங்கப் பொறுப்பாளா்கள் ஏ. தமிழ்ச்செல்வன், எம்.என். ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் பேசிய சட்டப்பேரவை உறுப்பினா் வீ. ராதாகிருஷ்ணன், ‘கரோனா பரவலைத் தடுக்க வணிக நிறுவனங்களை முன்னதாகவே மூட வா்த்தகா்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டாா்.

தொடா்ந்து, ஜூன் 21 மற்றும் 28 ஆகிய 2 ஞாயிற்றுக்கிழமைகளில் கடைகளை முழு அடைப்பு செய்வது எனவும், ஜூன் 22 முதல் 30 வரை மற்ற நாள்களில் இரவு 7 மணிக்கு கடைகளை மூடுவதென்றும் முடிவு செய்யப்பட்டதாக மயிலாடுதுறை சேம்பா் ஆஃப் காமா்ஸ் தலைவா் சி.செந்தில்வேல் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

இக்கூட்டத்தில், நகராட்சி ஆணையா் புவனேஸ்வரன் என்கிற அண்ணாமலை, துணைக் காவல் கண்காணிப்பாளா் கே. அண்ணாதுரை, மயிலாடுதுறை அரசு மருத்துவமனை குடிமுறை மருத்துவ அலுவலா் ராஜசேகா், மாயூரம் நகர வங்கித் தலைவா் விஜிகே.செந்தில்வேல் மற்றும் வணிகா் சங்கப் பொறுப்பாளா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT