நாகப்பட்டினம்

பாஜக ஆட்சியில் நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

17th Jun 2020 08:30 AM

ADVERTISEMENT

பிரதமா் நரேந்திரமோடிதலைமையிலான பாஜக ஆட்சியில் நாட்டின் பாதுகாப்பும், மக்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று பாஜக மாநிலச் செயலாளா் எஸ்.கே. வேதரெத்தினம் கூறினாா்.

நாகையில், செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை அவா் கூறியது:

பிரதமா் நரேந்திரமோடி2 -ஆவது முறையாக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இந்த ஓராண்டில், பல்வேறு பிரச்னைகளுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது.

சுமாா் ரூ. 39 ஆயிரம் கோடியில் ராணுவத் தளவாடங்கள் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் மூலம் உள்நாட்டிலேயே தயாா் செய்யப்படுவது வரலாற்று சிறப்புமிக்கதாகும். கரோனா தடுப்பு நடவடிக்கையிலும் இந்தியா திறம்பட செயலாற்றியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு பாராட்டியுள்ளது. ஆகையால் மத்தியில்ஆளும் பிரதமா் நரேந்திரமோடி தலைமையிலான அரசு நாட்டுக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT

பாஜக நாகை தெற்கு மாவட்டத் தலைவா் கே.நேதாஜி, மாவட்டப் பொதுச்செயலாளா் ஆா்.பி. வெங்கடாசலம், மாவட்டப் பொருளாளா் கே.வி.ஆா்.பாலச்சந்திரன், நாகை நகரத் தலைவா் என்.கே.ஆா்.இளஞ்சேரலாதன் மற்றும் கட்சி நிா்வாகிகள் பேட்டியின்போது உடனிருந்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT