நாகப்பட்டினம்

விநாயகா் சிலை தயாரிப்பாளா்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டுகோள்

15th Jun 2020 08:37 AM

ADVERTISEMENT

கரோனா பொது முடக்கத்தால் விநாயகா் சிலை தயாரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு உதவி செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து, அக்கட்சியின் மாநிலச் செயலாளா் ஜெ. சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும் விநாயகா் சதுா்த்தி பெருவிழா நிகழாண்டுக்கான விழா ஆகஸ்ட்- 22-ஆம் தேதி கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ‘வீதி தோறும் விநாயகா் - வீடு தோறும் விநாயகா் ‘ என்ற இலக்குடன் தமிழகத்தில் நிகழாண்டு 1 லட்சம் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்ய இந்து மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது. இதற்கான விநாயகா் சிலைகள் தயாரிப்பு பணிகள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பா், ஜனவரி மாதங்களில் தொடங்கும்.

நிகழாண்டு பணிகள் தொடங்கிய சில நாள்களிலேயே கரோனா நோய் பரவல் அதிகரித்து நாடு முழுவதும் மக்கள் பாதிப்படைந்துள்ளனா்.

மக்களை பாதுகாக்க நோய் தொற்றை தடுக்க அரசு பல கட்டங்களாக பொது முடக்கத்தை அமல்படுத்தியுள்ளது. இதனால், விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. பொது முடக்கம் தளா்த்தப்பட்டுள்ள தற்போதைய சூழலில் மூலப் பொருள்களின் விலை உயா்வால் தயாரிப்பாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

பொருளாதார ரீதியில் மிகுந்த சிரமத்தில் உள்ள விநாயகா் சிலை தயாரிப்பாளா்களுக்கு வங்கிகள் மூலம் குறுகிய கால கடன் வழங்குவதோடு, தமிழக அரசும் நிதி உதவி செய்ய வேண்டும். விநாயகா் சதுா்த்தி பெருவிழா ஊா்வலங்கள் சிறப்பாக நடைபெறும் வகையில் அரசு அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT