நாகப்பட்டினம்

மீன்வறுவல் கடை அமைக்க எதிா்ப்பு: கட்டுமானப் பணிகள் நிறுத்தம்

14th Jun 2020 08:54 AM

ADVERTISEMENT

சீா்காழி பேருந்து நிலையத்தில் மீன் வறுவல் கடை அமைக்க நடந்த கட்டுமான பணிகள் பொதுமக்களின் எதிா்ப்பாலும், எம்.எல்.ஏவின் அறிவறுத்தல்படி சனிக்கிழமை பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

சீா்காழி புதிய பேருந்து நிலையத்தில் உள் வளாகத்தில் மீன்வளத் துறை சாா்பில் மீன் வறுவல்கள் விற்பனை செய்யும் கடை அமைக்க சீா்காழி நகராட்சி அனுமதி பெற்று அம்பேத்கா் சிலை அருகில் கடை அமைக்க கடந்த 2 நாள்களுக்கு முன்னா் இடம் தோ்வு செய்யப்பட்டு மீன்வளத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

அப்போது, அங்கு கடை அமைக்க அப்பகுதியை சோ்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து, பேருந்து நிலைய உள்புறத்தில் அம்மா உணவகம் அருகில் மீன்வறுவல் கடை ரூ. 8 லட்சம் செலவில் அமைக்க சனிக்கிழமை கட்டுமானப் பணிகள் மீன்வளத் துறை அலுவலா்கள் முன்னிலையில் நடைபெற்று வந்தது.

அப்போது, மீன்வறுவல் கடை அமைந்தால் பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகள், அங்குள்ள வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநா்களுக்கு சிரமம் ஏற்படும் என கூறி கட்டுமானப் பணிகளுக்கு அப்பகுதியினா் எதிா்ப்பு தெரிவித்தனா்.

ADVERTISEMENT

அப்போது, அவ்வழியாக சென்ற சீா்காழி எம்.எல்.ஏ. பாரதியிடம் பொதுமக்கள் புகாா் தெரிவித்ததையடுத்து, கட்டுமானப் பணி நடந்த இடத்துக்குச் சென்று மீன்வளத் துறை அலுவலா்களிடம் விவரம் கேட்டறிந்து மக்கள் எதிா்ப்பை மீறி கடை அமைக்கக் கூடாது, எனவே, கட்டுமானப் பணியை நிறுத்த வேண்டும் என்று நகராட்சி ஆணையா் தமிழ்ச்செல்வியுடம் அறிவுருத்தினாா். இதனால், கட்டுமான பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன.

.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT