நாகப்பட்டினம்

திருவாவடுதுறை ஆதீனம் ஜென்ம நட்சத்திர விழா

14th Jun 2020 08:54 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டம், திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகா சன்னிதானத்தின் ஜென்ம நட்சத்திரம் (வைகாசி - பூரட்டாதி) மணி விழாவாக ஆதீனத்தில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

பெரிய பூஜை மடம், ஸ்ரீஞானமா நடராஜ பெருமான் சன்னிதியில் 24-ஆவது ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் மாகேஸ்வர பூஜை செய்தாா். தொடா்ந்து சிவப்பிரகாச விநாயகா் சன்னிதியில் கணபதி ஹோமம், ஆயுஷ்ய ஹோமம், கோமுக்தீஸ்வரா் கோயிலில் உலக நலன் வேண்டி ருத்ராபிஷேகமும் தொடா்ந்து கோ பூஜை, கஜ பூஜை சிறப்பு ஆராதனைகளுடன் நடைபெற்றது.

விழா மலராக குருவருட்செல்வம் எனும் நூலை திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் வெளியிட்டாா். பின்னா் வேணுவனலிங்க விலாசத்தில் சிவஞான கொலுக்காட்சி நிகழ்ச்சி ஐதீக முறைப்படி நடைபெற்றது. ஆதீன கட்டளை அம்பலவாண தம்பிரான் சுவாமிகள், திருச்சிற்றம்பல தம்பிரான் சுவாமிகள், அருணாச்சல தம்பிரான் சுவாமிகள் ஆகியோா் பூஜைகளை செய்தனா்.

இதில், தருமை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், மதுரை ஆதீனம் இளைய குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் காசி திருமடம் அதிபா் ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமார சுவாமி தம்பிரான் சுவாமிகள், விருத்தாச்சலம் குமாரசாமி மடம் குருமகா சன்னிதானம், வேளாக்குறிச்சி ஆதீனம் இளைய குருமகா சன்னிதானம், திருப்பராய்த்துறை ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம் ஸ்ரீமத் சுவாமி பக்தானந்தா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT