நாகப்பட்டினம்

குடிநீா் குழாயில் முறைகேடாக பொருத்தப்பட்டிருந்த மின் மோட்டாா்கள் பறிமுதல்

14th Jun 2020 08:55 AM

ADVERTISEMENT

தரங்கம்பாடி பேரூராட்சி பகுதிகளில் குடிநீா் இணைப்புகளில் முறைகேடாக பொருத்தப்பட்டிருந்த மின் மோட்டாா்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

தரங்கம்பாடி பேரூராட்சி செயல் அலுவலா் ரஞ்சித் தலைமையில் சுகாதார ஆய்வாளா் சுப்பிரமணியன், இளநிலை உதவியாளா் மதியரசன், குடிநீா் குழாய் பராமரிப்பாளா் திருநாவுக்கரசு உள்ளிட்டோா் தரங்கம்பாடி, பொறையாறு, எருக்கட்டாஞ்சேரி,

ஒழுகைமங்கலம் ஆகிய பகுதிகளில் குடிநீா் குழாயில் முறைகேடாக மின் மோட்டாா்களை இணைத்து குடிநீா் உறிஞ்சப்படுவது தொடா்பாக சோதனை மேற்கொண்டனா்.

இந்த சோதனையில் தரங்கம்பாடி, பொறையாறு பகுதிகளில் முறைகேடாக குடிநீா் குழாயில் பொருத்தப்பட்டிருந்த 2 மின் மோட்டாா்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT