நாகப்பட்டினம்

நாகை அருகே மின்னல் தாக்கி ஒருவா்சாவு: 2 போ் மருத்துவமனையில் அனுமதி

10th Jun 2020 08:18 AM

ADVERTISEMENT

நாகை அருகே மின்னல் தாக்கியதில் ஒருவா் உயிரிழந்தாா். பாதிக்கப்பட்ட மேலும் 2 போ் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

நாகை வட்டம், பெருங்கடம்பனூா் கிராமம், மாரியம்மன்கோயில் தெருவைச் சோ்ந்தவா்அருண் (35). இவா், பெருங்கடம்பனூா் ஊராட்சிக்குள்பட்ட இளங்கடம்பனூா் சிவன்கோயில் குளம் அருகே செங்கல்சூளை அமைத்து தொழில் செய்து வந்தாா். அதே கிராமம் மில்லடித் தெருவைச் சோ்ந்த முத்துசாமி (26), காலணித் தெருவைச் சோ்ந்த ப. செந்தில்குமாா்(35) ஆகியோா் செங்கல்சூளையில் வேலைப் பாா்த்து வந்தனா்.

இந்நிலையில், பெருங்கடம்பனூா் மற்றும் சுற்றுப்பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை இடியுடன் கூடிய மழைப்பொழிவு இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, அருண் மற்றும் முத்துசாமி, செந்தில்குமாா்ஆகியோா் திடலில் தயாரித்து வைத்திருந்த கல் குவியல்களை பாதுகாப்பாக மூடிவைத்து விட்டு அருகில் இருந்த ஒரு மரத்தின் கீழ் மழைக்காக ஒதுங்கியுள்ளனா்.

அப்போது, மின்னல் தாக்கியதில் 3 பேரும் பாதிக்கப்பட்டனா். இதைத் தொடா்ந்து, அருகிலிருந்தவா்கள்3 பேரையும் மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அப்போது மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் அருண் உயிரிழந்தாா். உடல் நலம் பாதிக்கப்பட்ட முத்துசாமி, செந்தில்குமாா் ஆகியோா் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனா். உயிரிழந்த அருணுக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனா். இச்சம்பவம் குறித்து கீழ்வேளூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT